×

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வே 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் : சி.எஸ்.டி.எஸ் கருத்து கணிப்பில் தகவல்

டெல்லி : ஒன்றிய பாஜக அரசின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக நாட்டு மக்களில் 55% பேர் கருதுவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக இருக்கும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. சி.எஸ்.டி.எஸ் என்ற லோக் நீதி அமைப்பு கடந்த 1995 முதல், தேர்தலின் போதும் தேர்தலுக்கு நடுவிலும் முக்கிய பிரச்சனைகள் குறித்து மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. 5 முக்கிய பிரச்சனைகளை முன்வைத்து அண்மையில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளின்படி 27% பேர் வேலையின்மையே முக்கிய பிரச்சனை என்றும் 23% பேர் விலைவாசி உயர்வே முக்கிய பிரச்சனை என்றும் தெரிவித்துள்ளனர். நாட்டின் வளர்ச்சியே முக்கிய பிரச்சனை என 13% பேரும், ஊழலே முக்கிய பிரச்சனை என 8% பேரும் கூறியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும் 55% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சில கருத்து கணிப்புகள் பின்வருமாறு…

வேலையின்மை, விலைவாசி உயர்வு யார் காரணம்?

ஒன்றிய அரசே காரணம் என 21%, மாநில அரசே பொறுப்பு என 17% மக்கள் கருத்து

நகர்புறங்களில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம்

*வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சனையாக உள்ளதாக பெருநகரங்களில் 65%, நகரங்களில் 59%, கிராமங்களில் 62% பேர் கருத்து

*ஆண்களில் 65% பேர், பெண்களில் 59% பேர் வேலை கிடைப்பது மிக கடினம் என கருத்து

*12% பேர் மட்டுமே வேலை சுலபமாக கிடைப்பதாக தெரிவித்துள்ளனர்.

*இஸ்லாமியர்களில் 69% பேர் வேலையின்மையால் பாதிப்பு என கருத்து, பழங்குடி மக்களில் 59 சதவீதத்தினர் பாதிப்பு என கருத்துக்கணிப்பில் தகவல்

*உயர்ஜாதி இந்துக்களில் 17% பேர் தான் எளிதாக வேலை கிடைப்பதாக கருத்து

விலைவாசி உயர்வு தேர்தலில் எதிரொலிக்கும்

*நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாக 71% மக்கள் கருத்து

*ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இந்த தேர்தலின் முக்கிய பிரச்சனை என கருத்து

*இஸ்லாமியர்களில் 76% பேரும், பட்டியல் வகுப்பில் 75% பேரும் விலைவாசி உயர்வால் அதிருப்தி

ராமர் கோயில், இந்துத்துவா பெரும் தாக்கம் ஏற்படுத்தாது

அயோத்தி ராமர் கோவில் தான் முக்கிய தேர்தல் பிரச்சனை என 8% பேர் கூறிய நிலையில், 2% பேர் மட்டுமே இந்துத்துவா தேர்தல் பிரச்சனையாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இதனால் இந்த 2 அம்சங்களும் மக்களவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

The post வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வே 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் : சி.எஸ்.டி.எஸ் கருத்து கணிப்பில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,CSTS ,Delhi ,BJP government ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...